மேலும் செய்திகள்
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
690 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
690 days ago
முன்னணி மலையாள நடிகையான லிஜோ மோல் ஜோஷ், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் 'ஜெய் பீம்' படம்தான் அவருக்கு புகழை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு 'தீதும் நன்றும்' படத்தில் நடித்தார். தற்போது அன்னபூரணி, காதல் என்பது பொதுவுடமை படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார்.
'கழுகு' படத்தை இயக்கிய சத்ய சிவா 1990களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செட்டுகள் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.
பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் 'பருத்தி வீரன்' சரவணன், 'கேஜிஎப்' மாளவிகா, போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழில் ஏராளமான படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள பாண்டியன் பரசுராம், முதல்முறையாக தனது விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
690 days ago
690 days ago