உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோசியல் மீடியா வக்கிரமாக இருக்கிறது : ஸ்வர்ணமால்யா

சோசியல் மீடியா வக்கிரமாக இருக்கிறது : ஸ்வர்ணமால்யா

பிரபல நடிகை மற்றும் வீஜேவான ஸ்வர்ணமால்யா ஒரு காலத்தில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவிலும் சின்னத்திரை சீரியல்களிலும் பல முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். தற்போது திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் ஸ்வர்ணமால்யா பரதநாட்டிய பள்ளியை ஆரம்பித்து பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சோசியல் மீடியா மிகவும் வக்கிரமாக இருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சோசியல் மீடியாவில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. மற்றவருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பேசினால் 25 பேராவது கழுவி ஊற்றுவார்கள். முகத்தை மூடிக்கொண்டு கோழைத்தனமாக சண்டை போடுகிறார்கள். இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. முன்கூட்டியே தப்பாக எடை போட்டு கமெண்ட் செய்கிறார்கள். இப்போது உள்ள காலத்தில் யாருக்கும் தனி மனித ஒழுக்கம் இல்லை. இந்த சமுதாயம் வக்கிரமாக மாறிக்கொண்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !