உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 32 ஆண்டுகள் கழித்து இணைந்த சல்மான் கான், ரேவதி

32 ஆண்டுகள் கழித்து இணைந்த சல்மான் கான், ரேவதி

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள 'டைகர் 3' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் நடிகை ரேவதி நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது.

நடிகை ரேவதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஹிந்தியில் படங்களை இயக்கியும் உள்ளார். கடந்த 1991ம் ஆண்டில் வெளிவந்த லவ் என படத்திற்கு பிறகு இப்போது 32 ஆண்டுகளுக்குப் கழித்து சல்மான் கான், ரேவதி டைகர் 3 படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !