பகவந்த் கேசரி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
ADDED : 733 days ago
அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் 'பகவந்த் கேசரி'. காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் மூலமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. வருகின்ற அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.