உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தியின் ‛ஜப்பான்' டீசர் வெளியானது

கார்த்தியின் ‛ஜப்பான்' டீசர் வெளியானது

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜப்பான்'. அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போது படத்தின் டீசரை மாலை 5 மணி அளவில் வெளியிட்டனர். 1:24 நிமிடம் ஓடும் இந்த டீசரில் கார்த்தி, ஜப்பான் எனும் மிகப்பெரிய திருடனாக நடித்துள்ளார். நான்கு மாநில போலீசார் அவரை தேடுவதாகவும், இதுவரை அவர் யார் கையிலும் சிக்கவில்லை என்பது போன்றும் டீசரில் காட்டி உள்ளனர்.

தற்போது இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !