மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
687 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
687 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
687 days ago
மலையாள சினிமாவின் சக்தி மிக்க ஆளுமையாக இருப்பவர் மம்முட்டி. 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிக தேசிய விருது வென்ற நடிகராகவும் இருக்கிறார். சமீபத்தில்கூட அவர் நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்' என்ற படம் 80 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.
மம்முட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவரது சிறப்பு தபால் தலை, ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டனர். அதனை இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்பிரீத் வோரா பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் “மம்முட்டி இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார். அவரது கலை சேவையை பாராட்டுகிறோம்'', என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வை மம்முட்டி ரசிகர்களும், மலையாளிகளும் கொண்டாடி வருகிறார்கள்.
687 days ago
687 days ago
687 days ago