மலையாள நடிகர் குந்தரா ஜானி காலமானார்
ADDED : 736 days ago
மலையாள சினிமாவில் குணசித்ரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் குந்தரா ஜானி. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1979-ம் ஆண்டு 'நித்யா வசந்தம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜானி 'மீன்', 'பரங்கிமலை', 'கரிம்பனா', 'காட்பாதர்', 'நாடோடிகாற்று', 'பரத்சந்திரன் ஐபிஎஸ்', 'ஸ்படிகம்' உள்ளிட்டவை முக்கியமான படங்கள்.
71 வயதான குந்தரா ஜானி கொல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.