உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேம் சேஞ்சர் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்

கேம் சேஞ்சர் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், அஞ்சலி, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். அரசியல் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் ராம் சரண். தமன் இசையமைக்கிறார்.

கடந்த வருடத்திலிருந்து இதன் படப்பிடிப்பு பல கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் தவிர வேறு எந்த அப்டேட் ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வருகின்ற தசரா பண்டிகை அன்று வெளியாக உள்ளதாகவும், இது குறித்து அறிவிப்பு வருகின்ற நாட்களில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !