தெலுங்கில் லியோ படத்தின் முதல் நாள் வசூல் அறிவிப்பு
ADDED : 755 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து நேற்று(அக்., 19) வெளிவந்த திரைப்படம் 'லியோ'. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்தார். 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டனர். அங்கு முதல் நாளில் ரூ. 16 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலமாக விஜய் நடித்து வெளிவந்த படங்களில் முதல் முறையாக ஆந்திரா, தெலுங்கானாவில் முதல் நாள் டபுள் டிஜிட் வசூல் சாதனை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.