உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கலான் டீசர் ரெடி

தங்கலான் டீசர் ரெடி

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். கேஜிஎப் பின்னணியில் சரித்திரகால படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்படுகிறது. ஆனால் அது தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ‛‛படத்தின்டீசர் ரெடியாகி விட்டது. அடுத்தவாரம் டீசர் வெளியாகும். அடுத்தடுத்து நிறைய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளி வரும்,'' என ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !