‛வித்தைக்காரன்' படத்தின் முதல் பாடல் வெளியானது
ADDED : 778 days ago
காமெடி நடிகர் சதீஷ், நாய் சேகர் படத்தில் கதாநாயகனாக நடித்ததை தொடர்ந்து தற்போது 'வித்தைக்காரன்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் வெங்கி இயக்குகிறார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வெங்கட் பரத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இப்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே இதன் டீசர் வெளியானதை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து 'லைப் இஸ் மேஜிக்' என்கிற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். நடிகர்கர் ஆர்யா, விஷால் வெளியிட்டனர். வைரமுத்து எழுதிய பாடலை நரேஷ் ஐயர் பாடி உள்ளார். வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது. அதை எப்படி வாழ வேண்டும் என்று கூறுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது.