இந்திய அளவில் ‛லியோ' சாதனை : முதல்நாளில் ரூ.148.5 கோடி வசூல்
                                ADDED :  745 days ago     
                            
                             லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து நேற்று திரைக்கு வந்துள்ள படம் ‛லியோ'.அவருடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரத்திங்கள் நடித்து இருந்தனர். அனிருத் இசையமைத்து இருந்தார். 
படம் முழுக்க ஆக் ஷன் விருந்தாக வெளியாகி உள்ளது.  விஜய்யின் மாறுப்பட்ட நடிப்பு என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் லோகேஷின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படம் கொஞ்சம் சுமார் என ரசிகர்கள் கூறுகின்றனர். 
இதையெல்லாம் மீறி  படம் சிறப்பான வசூலை கொடுத்துள்ளது. முதல்நாளில் இந்த படம் உலகம் முழுக்க ரூ.148.50 கோடி வசூலித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் தெரிவித்துள்ளது. மேலும் இந்தாண்டில் முதல்நாளில் அதிகம் வசூலித்த இந்திய படம் என்ற சாதனையையும் லியோ படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.