நடிகை ரச்சிதாவின் தந்தை திடீர் மறைவு
ADDED : 717 days ago
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமியின் தந்தை வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, தனது பெற்றோருக்காக தான் கணவருடன் சண்டை ஏற்பட்டதாக முன்பாக தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது தந்தையை பார்த்துக் கொள்வதற்காக தான் பல வாய்ப்புகளையும் ரச்சிதா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் மரணத்தால் ரச்சிதா சோகத்தில் மூழ்கியுள்ளார். ரச்சிதாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர்.