உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆயுத பூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

ஆயுத பூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

மாவீரன் படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் என்ற படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. மேலும் தன்னுடைய எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமாக கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, டாக்டர், டான் போன்ற படங்களை தயாரித்துள்ள சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஆயுத பூஜை கொண்டாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !