பிரெஞ்சு மொழி படத்தில் நடிக்கும் ராதிகா சரத்குமார்
ADDED : 759 days ago
1978ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. கடந்த 45 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வந்துள்ளார். அதோடு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக ஒரு பிரெஞ்சு மொழி படத்தில் தற்போது நடித்து வருகிறார் ராதிகா. இதற்காக தற்போது அவர் பிரான்ஸ் சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் ராதிகா, இந்த படத்தில் நடிக்க தன்னை ஊக்குவித்த கணவர் சரத்குமார், மகன் மிதுன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.