கமல் 233வது படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியானது
ADDED : 714 days ago
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்த முடித்திருக்கும் கமல்ஹாசன், அதையடுத்து வினோத் இயக்கும் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே கமல் நடிக்க இருந்து கிடப்பில் போடப்பட்ட மர்மயோகி என்ற படத்தின் தலைப்பையே இப்படத்திற்கு வைக்க இருப்பதாக முன்பு ஒரு செய்தி வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிக்க இருந்த தலைவன் இருக்கிறான் என்ற படத்தின் டைட்டிலை இந்த 233வது படத்திற்கு வைக்க இருப்பதாக இன்னொரு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஆரம்பகட்ட பணிகளோடு தலைவன் இருக்கிறான் படம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அதே கதைக்குதான் எச்.வினோத் திரைக்கதை எழுதி, இயக்கயிருப்பதாக கூறப்படுகிறது.