உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தங்கலான்' ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு

‛தங்கலான்' ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தங்கலான்'. கோலார் தங்கவயல் சுரங்கத்தின் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் கதையை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகமல் இருந்தது. கடந்தவாரம் ரஞ்சித், ‛‛இந்த படத்தின் டீசர் ரெடியாகி விட்டது. அடுத்தவாரம் (இந்தவாரம்) முதல் அப்டேட் வெளியாகும்'' என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி தங்கலான் படத்தின் டீசரை வரும் நவ., 1ல் வெளியிடுகின்றனர். படத்தை 2024, குடியரசு தினமான ஜன.,26ல் ரிலீஸ் செய்கின்றனர்.

முன்னதாக இந்த படம் பொங்கல் வெளியீடு என கூறப்பட்டு வந்தது. இப்போது பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகி குடியரசு தினத்தில் வெளியாக போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !