மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
679 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
679 days ago
நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் மாறி வரும் கலையுலகில் மாறா இளமையோடு, இன்றும் மனம் கவர்ந்த திரை ஆளுமையாக வாழ்ந்து வரும் நடிகர் சிவகுமாரின் 82வது பிறந்த தினம் இன்று… “காக்கும் கரங்கள்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார். குறிப்பாக “பொன்னுக்கு தங்க மனசு”, “கண்மணி ராஜா”, “அன்னக்கிளி”, “உறவாடும் நெஞ்சம்”, “கவிக்குயில்”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”, “பூந்தளிர்” மற்றும் இவரது 100வது படமான “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”, “அக்னி சாட்சி” மற்றும் “சிந்து பைரவி” ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கியமான படங்களாகும்.
சிவகுமார் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!'' என குறிப்பிட்டுள்ளார்.
679 days ago
679 days ago