அர்ஜுன் - தம்பி ராமையா குடும்ப நிச்சயதார்த்தம்!
ADDED : 795 days ago
தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவர் அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பட்டத்து யானை, சொல்லி விடவா ஆகிய படங்களில் நடித்த நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் தை மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.