உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யை நேரில் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது : சீரியல் நடிகை ஷீலா உருக்கம்

விஜய்யை நேரில் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது : சீரியல் நடிகை ஷீலா உருக்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக நடித்திருந்த ஷீலா, நடிகர் விஜய்யின் சித்தியாவார். ஷீலா பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் விஜய் பிறந்துள்ளார். எனவே, அப்போதெல்லாம் விஜய்யை குளிப்பாட்டி தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என எப்போதும் விஜய்யை தூக்கி வைத்து கொண்டு தான் திரிவாராம். விஜய்யும் அவருடைய அம்மாவை காட்டிலும் ஷீலாவிடம் தான் அதிகமாக இருப்பாராம். ஆனால் அதற்கு பிறகு காலங்கள் மாற மாற எல்லாம் மாறிவிட்டது என்று கூறிய ஷீலா, தற்போது விஜய்யை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் உருக்கமாக கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !