உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு தங்கை ஆகும் லவ் டுடே நாயகி

விஜய்க்கு தங்கை ஆகும் லவ் டுடே நாயகி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என சமீபத்தில் பூஜை வீடியோ உடன் அறிவித்தனர்.

ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க 'லவ் டூடே' படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !