மூன்று முறை தற்கொலை முயற்சி! கவிதா வாழ்வில் நடந்தேறிய சோகம்
ADDED : 726 days ago
சினிமாவில் குணசித்திர நடிகையாக வலம் வந்த கவிதா, பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாகவே அவர் கேமரா முன் தோன்றவில்லை. இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் யாருக்கும், வரக்கூடாத நிலைமை நடிகை கவிதாவிற்கு வந்திருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் முதலில் மகனை இழந்த கவிதா, அடுத்த சில நாட்களிலேயே கணவரையும் இழந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் கவிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.