‛ரஜினி 170' : புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு
ADDED : 739 days ago
'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆரம்பமானது. இப்படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.
இந்தப் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து நடித்த காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. மும்பையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் ரஜினி-அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.