நிச்சயம் காதல் திருமணம் தான் : ஸ்ரீ திவ்யா
ADDED : 707 days ago
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது, பென்சில் உட்பட பல படங்களில் நடித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ திவ்யா, தற்போது விக்ரம் பிரபுவுடன் ரெய்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன்பிறகும் புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் திருமணம் பற்றி கூறும்போது, ‛‛என்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னுடைய காதலரையே திருமணம் செய்து கொள்வேன். அவர் யார்? எப்போது திருமணம்? என்பதை எல்லாம் அதற்கான நேரம் வரும்போது வெளியிடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா.