தள்ளிப்போன கல்யாணி பிரியதர்ஷனின் படம்
ADDED : 725 days ago
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ஒரே நேரத்தில் மலையாளத்தில் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன. இதில் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கால்பந்து விளையாட்டிற்கு கமெண்டரி கொடுக்கும் ஒரு இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தை மனு சி. குமார் என்பவர் இயக்கியுள்ளார். இன்னொரு பக்கம் பிரபல கமர்சியல் இயக்குனரான ஜோஷி டைரக்ஷனில் உருவாகியுள்ள ஆண்டனி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் கல்யாணி.
இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்தது. சேஷம் மைக்கில் பாத்திமா படம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நவம்பர் 17ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.