உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல மறந்த விஜய் : கமல் ரசிகர்கள் வருத்தம்

கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல மறந்த விஜய் : கமல் ரசிகர்கள் வருத்தம்

'விக்ரம்' படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தின் மூலம் இன்னும் அதிகமான பிரபலத்தை அடைந்தார். படம் கொடுத்த வசூல், பெயர் ஆகியவற்றால் இயக்குனர் லோகேஷ் மீது தனி அன்பு செலுத்த ஆரம்பித்தார் கமல். இருவரும் அடுத்த சில வருடங்களில் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் ஒரே ஒரு டயலாக் மட்டும் பின்னணிக் குரல் மூலம் பேசியிருப்பார். விஜய் நடிக்கும் படத்தில் கமல்ஹாசன் இப்படிப் பேசியது படம் வந்த பின் பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

நேற்று முன்தினம் நடைபெற்ற 'லியோ' படத்தின் வெற்றி விழாவில் கமல்ஹாசனுக்கு எந்தவிதமான நன்றியையும் விஜய் தெரிவிக்கவில்லை. அது கமல் ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !