விக்ரம் பிரபுவின் ரெய்டு டிரைலர் வெளியானது
இறுகப்பற்று படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ரெய்டு. ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இவர்களுடன் சவுந்தரராஜா, ரிஷி ரித்விக், அனந்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கி இருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ள இந்த ரெய்டு படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் அழகுச் செல்லம் என்ற இரண்டாவது பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.