மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
671 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
671 days ago
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ ஒன்று நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழ் வீடியோ 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
'இந்தியன் 2' படம் 2019ம் ஆண்டே ஆரம்பமானது. கிரேன் விபத்து, கொரோனா தாக்கம், தயாரிப்பாளர், இயக்குனர் பஞ்சாயத்து என பல்வேறு தடைகளைக் கடந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிந்தது. நேற்று வெளியான வீடியோவில் மறைந்த நடிகர்கள் சிலரைப் பார்க்கும் போது வருத்தமாகவே இருந்தது.
'இந்தியன்' படத்தின் முதல் பாகத்திலேயே தனி முத்திரை பதித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு, காமெடி நடிகர் விவேக், மனோபாலா ஆகியோர் 'இந்தியன் 2' அறிமுக வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். மற்றொரு மறைந்த நடிகரான மாரிமுத்துவும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகப் போவதாகச் சொல்கிறார்கள். மறைந்த நடிகர்களாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அவர்களின் கடைசிப் படமாக 'இந்தியன் 2' படம் இருக்கப் போகிறது.
671 days ago
671 days ago