அனிரூத்துக்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத்
ADDED : 785 days ago
கார்த்திகேயா பட இயக்குனர் சேன்டோ மோன்டடி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் முதல் முறையாக மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இதில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கின்றார். பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு முதலில் இசையமைக்க அனிரூத் ஒப்பந்தம் ஆனதாக தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.