உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் விடுதலை 2ம் பாகம்

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் விடுதலை 2ம் பாகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. இது 2ம் பாகம் இந்த வருடமே வெளியாகும் என தெரிவித்து வந்த நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடையாமல் நடைபெற்று வந்ததால் 2024 ஜனவரி 26ந் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்னும் இதன் படப்பிடிப்பு முடிக்காமல் வெற்றிமாறன் தாமதித்து வருவதால் தற்போது கிடைத்த தகவலின் படி, இத்திரைப்படம் 2024 சம்மருக்கு தான் திரைக்கு வரும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !