சென்னை மெரினா பீச் மணலில் வாகனம் ஓட்டிய கீர்த்தி சுரேஷ்!
ADDED : 713 days ago
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்திற்கு பிறகு சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சோசியல் மீடியாவில் தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது சென்னையில் உள்ள மெரினா பீச்சில் தான் வாகனம் ஓட்டும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவிற்கு 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது. அதோடு நம்ம சென்னையில் ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்ந்த அனுபவம் என்றும் அவர் ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.