உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு மணி நேரத்தில் தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த விக்ரம்!

ஒரு மணி நேரத்தில் தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த விக்ரம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2024 ஜனவரி 26ம் தேதி அன்று வெளியாகிறது.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஏற்கனவே இப்படத்தில் விக்ரம்-க்கு குறைவான வசனங்கள் தான் உள்ளது என அவரே தெரிவித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இதன் டப்பிங் பணிகளில் விக்ரம் ஒரு மணி நேரத்தில் தங்கலான் படத்தின் மொத்த டப்பிங் பணியையும் நிறைவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !