உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெங்கட்பிரபு பிறந்தநாளில் விஜய் 68 அப்டேட் தந்த அர்ச்சனா கல்பாதி

வெங்கட்பிரபு பிறந்தநாளில் விஜய் 68 அப்டேட் தந்த அர்ச்சனா கல்பாதி

நடிகர் விஜய்யின் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு விஜய் தனது 68வது படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வெங்கட் பிரபுவின் பிறந்தநாளுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, வெங்கட் பிரபு பிறந்தநாள் நேற்று இரவே கொண்டாடப்பட்டது. அதனால் இன்று படப்பிடிப்பு இல்லை. இந்தப் படத்தின் ஒரு புதிய அப்டேட்டை நான் தருகிறேன். நேற்று இரவு இப்படத்தின் முக்கியமான சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !