அறம் பட இயக்குனரின் அடுத்த படம் கருப்பர் நகரம்!
ADDED : 759 days ago
கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் அறம். இந்த படத்தை இயக்கியவர் கோபி நயினார். இவர் அறம் படத்திற்கு முன்பே கருப்பர் நகரம் என்ற ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறம் படத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கிடப்பில் போட்டிருந்த அந்த கருப்பர் நகரம் படத்தை இயக்கப்போகிறார் கோபி நயினார். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் இந்த கருப்பர் நகரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.