பொங்கல் ரேஸில் இணைந்த தனுஷின் கேப்டன் மில்லர்!
ADDED : 697 days ago
2024ம் ஆண்டு ஜனவரியில் வரும் பொங்கல் தினத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-4 ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிடுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதனால் பொங்கலுக்கு 4 படங்கள் திரைக்கு வருவது இதுவரை உறுதியாகியுள்ளது. மேலும், தனுஷின் 47வது படமான இந்த கேப்டன் மில்லர் படத்தில் அவருடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.