உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதி கட்டத்தை எட்டிய விஷால் 34வது படத்தின் படப்பிடிப்பு!

இறுதி கட்டத்தை எட்டிய விஷால் 34வது படத்தின் படப்பிடிப்பு!


தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் விஷால் சம்மந்தப்பட்ட காட்சிகள் உடன் தொடங்கியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !