உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சலார் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஹிந்தி நடிகை!

சலார் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஹிந்தி நடிகை!

கே.ஜி.எப் 1,2 படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் நீல் தெலுங்கில் நடிகர் பிரபாஸை வைத்து உருவாக்கி வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி அன்று வெளியாகிறது.

இந்த நிலையில் இப்போது இத்திரைப்படத்திற்காக ஒரு சிறப்பு பாடல் ஒன்றை படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த பாடலுக்கு சமீபத்தில் 'கர்தார் 2' படத்தின் மூலம் பிரபலமான சிம்ரட் கவுர் நடனமாடுகிறார். நான்கு நாட்கள் இப்பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !