தாய் கிழவி ஆக மாறும் ராதிகா!
ADDED : 697 days ago
நடிகை ராதிகா சரத்குமார் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருமணம், குழந்தைகளுக்கு பிறகு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது அல்லாமல் அவ்வப்போது சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, காக்கா முட்டை மணிகண்டனின் உதவி இயக்குநர் சிவா இயக்கத்தில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இது பாட்டி, பேரன் சென்டிமென்ட் படம் என்பதால் இதற்கு 'தாய் கிழவி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை பிளாக் ஷிப் நிறுவனம் தயாரிப்பதாக கூறுகின்றனர்.