மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
663 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
663 days ago
'கண் சிமிட்டும் ஒரு நொடியில் நீ சிரிக்கும் அழகில் மின்னல் பல தெறித்தோடும்; உன் சிவந்த குழிக் கன்னங்களில் தோன்றும் அழகு பள்ளங்களில் உள்ளங்கள் பல வீழும். உன் நெற்றி பரப்பில் படர்ந்து பரவும் கூந்தல் கோலத்திலும், கொள்ளை அழகிலும் மயங்கினோம் நாங்கள்' என ரசிகர்கள் கொண்டாடும் நாயகி ஹன்சிகா மோத்வானி. தினமலர் தீபாவளி மலருக்காக மனம் திறந்த தருணங்கள்...
ஹன்சிகா என்றாலே இளமைக்கு இலக்கணம் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். உங்க இளமையின் ரகசியம் என்ன...
ரசிகர்கள் ஆதரவு தான் எனர்ஜி. அவர்களை மரியாதையுடன் நினைத்து பார்க்கிறேன். அந்த ஆதரவே என்னை என்றும் இளமையாக வைத்திருக்கும். ரசிகர்கள் ஆதரவே இளமை ரகசியம்.
பான் இந்தியா படங்கள் குறித்து...
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் பான் இந்தியா படங்களாக வெளியாகின்றன. நம்மிடையே பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பங்கள் உள்ளன. திறமையான கலைஞர்கள் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது.
'சின்ன குஷ்பூ' என கொண்டாடும் தமிழ் ரசிகர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன...
'சின்ன குஷ்பூ' என கூறுவது சந்தோஷமே. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நடிகையை பிடித்து விட்டால் போதும் அவர்களை கொண்டாடி விடுவர். அவர்களின் 'அன்கண்டிஷனல் லவ்' தான் நான் கற்றுக்கொண்டது. என்றும் தமிழ் ரசிகர்கள் எனக்கு 'ஸ்பெஷல்' தான்.
எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், போகன் என தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட ஹன்சிகாவை மீண்டும் அதே அழகில் திரையில் பார்க்க துடிக்கின்றனரே...
விரைவில் பல படங்கள் திரைக்கு வரவுள்ளன. சபரி, குருசரவணன் இயக்கத்தில் 'கார்டியன்' படம் முடிந்து, டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 'அரண்மனை 2'க்கு பின் மீண்டும் உங்களை நடிப்பில் மிரட்ட போகிறேன்.
ஹன்சிகா வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் 'சும்மா... சரவெடியா இருக்குமா' ...
கண்டிப்பாக தீபாவளி களைகட்டும். கர்நாடகா மங்களூரில் எங்க வீடு இப்போது இருந்தே கொண்டாட்டங்களுக்கு தயாராகி விட்டது. விதவித ஸ்வீட்களும் தயாராகி விட்டது. தீபாவளி என்றால் வெடி, புது டிரஸ், ஸ்வீட் தான் நினைவுக்கு வரும். பசுமை பட்டாசு வெடித்து பசுமை தீபாவளியாக கொண்டாட வேண்டும்.
ரசிகர்களுக்கு சொல்வது
அனைத்து ரசிகர்கள் வீடுகளிலும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள். ஹேப்பி தீபாவளி.
663 days ago
663 days ago