பன் மொழிகளில் கலக்கும் சாக்ஷி அகர்வால்
ADDED : 753 days ago
தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப் பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது அவருக்கு கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வாய்ப்பு வர துவங்கி உள்ளது.
மலையாள நடிகர் மம்முட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து, பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சாக்ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம்.