உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் 17ல் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ்

நவம்பர் 17ல் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ்

தீபாவளி வந்த பின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முக்கியமான படங்களை வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் எப்படியாவது இரண்டு வாரங்களாவது தாக்குப் பிடித்து ஓடிவிடும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும் எப்படியாவது இரண்டு வாரத்தைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்த வார வெள்ளிக்கிழமையான நவம்பர் 17ம் தேதி முக்கிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு சிறிய படங்கள் மட்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த், அவிதேஜ் ரெட்டி நடித்துள்ள 'சைத்ரா' படமும், 'அம்புநாடு ஒம்பது குப்பம்' படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பைத் தவிர வேறு படங்களின் அறிவிப்பு வரவில்லை.
அதே சமயம் நவம்பர் 24ம் தேதி, டிசம்பர் 1ம் தேதிகளில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !