விஷ்ணுவர்தனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் அதர்வா தம்பி
ADDED : 704 days ago
மறைந்த தமிழ் நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது முரளியின் இளைய மகன் மற்றும் அதர்வா-வின் தம்பி ஆகாஷ் முதல் முறையாக தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அவரின் மாமா மற்றும் நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் ஆகாஷ் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் லிங்குசாமி ஆகாஷ்-ன் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பையா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.