மீண்டும் இணைந்த அடங்க மறு பட கூட்டணி
ADDED : 698 days ago
கடந்த 2018 ஆண்டில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த 'அடங்க மறு' படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் தங்கவேல் கடந்த சில வருடங்களாக நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோருடன் கதை கூறி காத்திருந்தார். ஆனால், அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் மீண்டும் அவர் ஜெயம் ரவிக்கு கதை கூறியுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் இதனை அடங்க மறு படத்தை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர் பார்கலாம் என்கிறார்கள்.