உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்டர் உடையில் அதிதி ஷங்கர் : நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா?

டாக்டர் உடையில் அதிதி ஷங்கர் : நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா?

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன், ராம்குமார் ஆகியோர் இயக்கி வரும் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். டாக்டருக்கு படித்தபோதும் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக்டர் ஏ என்று பதிவிட்டு டாக்டர் உடை அணிந்தபடி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்துவிட்டு அதிதி நடிப்புக்கு முழுக்கு போட போகிறாரா அல்லது பட ஷூட்டிங்கா என கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !