உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் 'கேஜிஎப் 2' படத்தை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட 'சலார்'

தெலுங்கில் 'கேஜிஎப் 2' படத்தை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட 'சலார்'

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உலக அளவில் மொத்தமாக 1200 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

அப்படத்தின் தெலுங்கு வினியோக உரிமை சுமார் 80 கோடிக்கு விற்கப்பட்டது. தெலுங்கில் மட்டும் 140 கோடி வரை வசூலித்து சாதனை படைத்து நல்ல லாபத்தையும் கொடுத்தது.

அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்து பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தை இயக்கி முடித்துள்ளார். டிசம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. தெலுங்கு உரிமையாக 165 கோடி வரை விற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு நடிகரான பிரபாஸ் படத்தின் கதாநாயகன் என்பதால் 'கேஜிஎப் 2' படத்தை விடவும் இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். 'பாகுபலி 2, கேஜிஎப் 2' ஆகிய படங்களின் வசூலை தெலுங்கில் முறியடித்து புதிய வசூல் சாதனையை 'சலார்' படைக்குமா என்று பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !