தனுஷ் மூத்த மகனுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை
ADDED : 684 days ago
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தனுஷ், ஜஸ்வர்யா தம்பதியினர் கடந்த 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ்க்கையை தொடர போவதாக தெரிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா (வயது 17) பயிற்சியாளர் உதவியுடன் R15 பைக்கை போயஸ் கார்டன் பகுதியில் ஓட்டி பழகும் காட்சி வைரலானது. இதையடுத்து போக்குவரத்து துறை போலீசார் தனுஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 1000 அபராதம் விதித்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.