அனிமல் படத்தின் டிரைலர் அப்டேட்
ADDED : 732 days ago
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ஹிந்தியில் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இதன் டிரைலர் வருகின்ற நவம்பர் 21ந் தேதி அன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.