மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
660 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
660 days ago
தெலுங்கில் ஆர்.டி.எக்ஸ், மகாசமுத்திரம் படங்களை இயக்கிய அஜய் பூபதி இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கும் படம் 'மங்களவாரம்'. இந்த படம் தமிழில் 'செவ்வாய்க்கிழமை' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதில் பாயல் ராஜ்புத், அஜ்மல், ஸ்ரீதேஜ், அஜனேஷ் கோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் புரமோசன்கள், விளம்பரங்கள் இந்த படத்தை ஆன்மிகம் கலந்த பேண்டசி படமாக சித்தரித்தது. ஆனால் படத்தில் பேசப்படும் விஷயத்தை பற்றி எந்த புரமோசனிலும் குறிப்பிடவில்லை.
இந்த படத்தில் பாயல் ராஜ்புத் 'நிம்போமேனியா' என்ற பிரச்னை உடையவராக நடித்திருக்கிறார். நிம்போமேனியா என்றால் அதீத பாலுணர்வு கொண்டவர் என்று பொருள். ஹார்மோன் கோளாறால் இந்த பிரச்னை கோடியில் ஒரு சிலருக்கு இருக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணின் பிரச்னையை காதல், பழிக்குபழி வாங்கல் என்ற கமர்சியல் விஷயங்களோடு இந்த படத்தில் காட்டியுள்ளார்கள்.
660 days ago
660 days ago