கங்கா ஆரத்தி தரிசனம் செய்த சன்னி லியோன்
ADDED : 702 days ago
இந்திய வம்சாவளியை சேர்ந்த சன்னி லியோன் கனடா நாட்டில் 'பார்ன் ஸ்டாராக' இருந்தார். பின்னர் இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்த அவர் தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் வடகறி, மதுரராஜா படங்களில் நடனம் ஆடினார் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள 'கொட்டேஷன் கேங்' என்ற படம் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் காசிக்கு சென்ற சன்னி லியோன் அங்கு பயபக்தியுடன் கங்கா ஆரத்தியை தரிசித்தார். கழுத்தில் மாலை, நெற்றியில் சந்தனம் தரித்து தீபம் ஏந்தி வழிபட்டார். சன்னி லியோன் காசி வந்திருக்கும் தகவல் அறிந்து ரசிகர்கள் அவரை தேடினார்கள். ஒரு கட்டத்தில் அவரை கண்டுபிடித்து கூட்டம் அதிகமாகவே அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் சென்றார் சன்னி லியோன்.