நயன்தாரா பிறந்தநாள் : விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்
ADDED : 689 days ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இன்று தன்னுடைய 39 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமாத் துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதேபோல் அவர் நடித்துள்ள டெஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதோடு, அவரது 75வது படமான அன்னபூரணி படத்தின் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகிறது. இந்நிலையில் மனைவி நயன்தாரா, மற்றும் மகன்கள் உடன் இருக்கும் ஜாலி போட்டோவை வெளியிட்டு நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.